×

வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது: தெற்கு ரயில்வே விளக்கம்

சென்னை: வந்தே பாரத் ரயில் முழுக்க முழுக்க கவாச் பாதுகாப்பு அம்சத்துடன் இயக்கப்பட்டு வருகிறது என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. மாடு மோதினால் கூட வந்தே பாரத் ரயில் மோசமான விபத்தில் சிக்க நேரிடும் என்று சு.வெங்கேடேசன் எம்பி குற்றச்சாட்டு வைத்துள்ளார். கால்நடைகள் மோதும் போது ஏற்படும் தாக்கத்தை சமாளிக்கும் வகையில் வந்தேபாரத் ரயிலின் முன்முனை வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வித தடையும் இன்றி வந்தே பாரத் ரயிலால் மணிக்கு 160கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் என்று தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

The post வந்தே பாரத் ரயில் பாதுகாப்பானது: தெற்கு ரயில்வே விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Su. Venkatesan… ,Dinakaran ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்