×

ஈஸ்டர் திருநாளையொட்டி போப் பிரான்சிஸ் ஆசிர்வாதம்

வாடிகன் சிட்டி: ஈஸ்டர் திருநாளையொட்டி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் மக்களை சந்தித்து ஆசிர்வாதம் வழங்கினார்.  கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ்(88) கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதல் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். ரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு நுரையீரல் தொற்று மற்றும் சுவாச குழாய் பாதிப்பு மற்றும் இரட்டை நிமோனியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்திருந்தது. பிப்ரவரி 23ம் தேதி போப் பிரான்சிஸ்க்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியிருந்தனர்.

இதையடுத்து தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த போப் பிரான்சிஸ் முழுவதும் குணமடைந்து மார்ச் 23ம் தேதி வாடிகன் திரும்பினார். இந்நிலையில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி போப் பிரான்சிஸ் நேற்று வாடிகன் நகருக்கு வந்தார். அங்கு வாடிகன் சதுக்கத்தில் குழுமியிருந்த மக்களை பார்த்து போப் பிரான்சிஸ் சந்தோஷத்துடன் கையசைத்தார். பின்னர் சகோதர, சகோதரிகளே அனைவருக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துகள் என்று வாழ்த்து தெரிவித்தார்.

The post ஈஸ்டர் திருநாளையொட்டி போப் பிரான்சிஸ் ஆசிர்வாதம் appeared first on Dinakaran.

Tags : POPE FRANCIS ,EASTER FESTIVAL ,Vatican City ,Pope Lord Francis ,Vatican ,Easter ,Catholic Church ,Gemelli hospital ,Rome ,
× RELATED நீதித்துறை வெளியிட்ட 16 எப்ஸ்டீன்...