ஜெருசலேம் : ஈரானின் மிக மூத்த தலைவரும் தேசிய பாதுகாப்பு செயலாளருமான அலி லாரிஜானியை படுகொலை செய்ததாக இஸ்ரேல் அரசு அறிவிப்பு வெளியிட்டது. இஸ்லாமிய நாடுகளுக்கு நேற்று அலி லாரிஜானி உருக்கமான கடிதம் எழுதியிருந்த நிலையில், நேற்றிரவு நடத்திய தாக்குதலில் பலியானதாக இஸ்ரேல் தகவல் அளித்துள்ளது. தாக்குதல் நடத்த உத்தரவிடும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவின் புகைப்படமும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.
