×

அமெரிக்க துணை அதிபர் இன்று வருகை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை

புதுடெல்லி: அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 26% பரஸ்பர வரி விதித்திருக்கும் சூழலில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4நாள் பயணமாக இன்று இந்தியா வர உள்ளார். அவருடன் அவரது இந்திய வம்சாவளி மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளும் வருகின்றனர். இன்று காலை 10 மணிக்கு டெல்லி வரும் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினர், சுவாமி நாராயண் அஷர்தாம் கோயிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

பின்னர் மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ இல்லமான லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் ஜே.டி.வான்சை சந்திக்க உள்ளார். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும், வான்சும் அமெரிக்க வரி விதிப்பு, இருதரப்பு உறவு, முன்மொழியப்பட்ட இருதரப்பு வர்த்தகத்தை முன்கூட்டியே இறுதி செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

 

The post அமெரிக்க துணை அதிபர் இன்று வருகை: பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : US ,Vice President ,Modi ,NEW DELHI ,U.S. ,VICE CHANCELLOR J. D. Vance ,India ,Usha Vance ,US Vice President ,
× RELATED பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில்...