×

பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரோப் கார் தூண்களோடு இடிந்து விழுந்தது!!

பாட்னா: பீகார் மாநிலம் ரோட்டாஸ் மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ரோப் கார் தூண்களோடு இடிந்து விழுந்தது. பீகாரின் ரோஹ்தாஸ்கர் கோட்டை பகுதியில் ரூ.13 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரோப்கார் பாதை, சோதனை ஓட்டத்தின்போது தூணோடு சரிந்து விழுந்தது. சோதனை ஓட்டத்தின்போதே ரோப் கார் தூணோடு இடிந்து விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். பீகாரில் ரோப் கார், தூண்கள் இடிந்து விழுந்ததில் யாருக்கும் காயம் இல்லை. கடல் மட்டத்தில் இருந்து 1,400 அடி உயரத்தில் அமைந்துள்ளது ரோட்டாஸ் கோட்டை முக்கிய சுற்றுலா தளமாக விளங்குகிறது.

ரோட்டாஸ் கோட்டை, புகழ்பெற்ற சவுராசன் கோயிலை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் புத்தாண்டு அன்று திரள்வார்கள். புதிதாக அமைக்கப்பட்ட ரோப்கார், புத்தாண்டில் இருந்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர இருந்த நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.பி.எல். என்ற நிறுவனம் ரூ.12.35 கோடியில் ரோப்கார் கட்டுமான பணி மேற்கொண்டது. 1324 மீட்டர் தூர ரோப் லைன் அமைக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்ட நிலையில் கட்டமைப்புகள் இடிந்து விழுந்தன.

Tags : Bihar ,Rotas district ,Patna ,Robkar track ,Rohtaskar Fort ,
× RELATED டெல்லியில் கடுங்குளிர் மற்றும் அடர்...