- திருவண்ணாமலை மாவட்டம்
- மாவட்ட சட்ட சேவைகள் ஆணையக் குழு
- தந்தரம்பட்டு
- தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையம்
- சென்னை உயர் நீதிமன்றம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- திருவள்ளூர்
- செங்கல்பட்டு
*மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு தலைவர் தொடங்கி வைத்தார்
தண்டராம்பட்டு : சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் உத்தரவு படி தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் நடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் நடப்பாண்டு சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்கள் தவிர மாநிலம் முழுவதும் மற்ற மாவட்டங்களில் நீதிமன்றங்கள், பொது இடங்களில் மரம் நடும் திட்டம் நடத்த சட்ட சேவைகள் ஆணையம், அந்தந்த மாவட்ட வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மூலம் ஏற்பாடுகளை செய்து வந்தது.
அதன்படி தண்டராம்பட்டு அடுத்த மெய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் நேற்று காக்க காக்க கானகம் காக்க அறத்தின் அலகு மரத்தில் தெரியும் என்ற தலைப்பில் மரம் நடும் விழா மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழு தலைவரும் மாவட்ட நீதிபதி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட சட்டப்பணிகள் ஆணைய செயலாளர் விஜயலட்சுமி வரவேற்றார்.
கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர், மாவட்ட வன அலுவலர் சுதாகர், டிஆர்ஓ ராமபிரதீபன், ஆர்டிஓ ராஜகுமார், கோட்ட பொறியாளர் ஞானவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மூத்த வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நீதிபதி மதுசூதனன் மரக்கன்றுகளை நடவு செய்து பேசியதாவது:
கிராமம் மையப்படுத்த வேண்டும். இந்த விழா கிராமத்தில் நடத்த என்ன காரணம் மக்கள் சேவை நோக்கத்தினால் தான் இந்த விழா நடத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாக்க முன்னோர்கள் முதல் இப்பொழுது வரைவீட்டில் யாரேனும் இறந்தால் மாட்டு சாணத்தில் நவதானியம் வைத்து அந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ஆற்றுப்பகுதியில் விடுவார்கள்.
அந்த விதை ஆற்றங்கரை ஓரத்தில் சென்று முளைத்து பசுமையை ஏற்படுத்தும். இந்த மண்ணுக்கு நாம் என்ன செய்தோம் மரம் நடும் அவசியம். தற்பொழுது கூட கிராம மத்திய பகுதியில் பெரியோர்கள் அரச மரம் நட்டு மக்கள் தூய்மையான காற்று சுவாசிப்பதற்காக வைத்து உள்ளனர். ஆலமரம், புளியமரம், தூய காற்று தரும். தென்னை மரம் அருகில் நட்டால் இரண்டு மரமும் ஒன்றோடு ஒன்று தொடாமல் இடம் விட்டு வளர்கிறது.
அது போன்று நாம் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். தென்னை மரம் மண்ணரிப்பை தடுக்கிறது. பனைமரம் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுகிறது. சாலை ஓரத்தில் ஒரு மரம் வெட்டினாள் பத்து மரம் நட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதனால் 50,000 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதனால்தான் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளி சுற்றுவட்டார பகுதி, மருத்துவமனை அரசு கட்டிடங்கள் அருகிலுள்ள காலி பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி துவங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.பின்னர் கலை நிகழ்ச்சி மூலம் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இறுதியாக வழக்கறிஞர் வேலு நன்றி கூறினார்.
இதேபோன்று தண்டராம்பட்டு சிவன் கோயில் அருகே தண்டராம்பட்டு நீதிபதி அமிர்தம் தலைமையில் மரக்கன்று நடுவிழா நடைபெற்றது. பிடிஓக்கள் ரவீந்திரன் பரிமேலழகன் அரசு வழக்கறிஞர்
வசந்தகுமார் கலந்து கொண்டனர்.
The post திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் appeared first on Dinakaran.

