×

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பங்குத்தந்தைக்கு 2 ஆண்டு சிறை

ராமநாதபுரம்: சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பங்குத்தந்தைக்கு, ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. ராமநாதபுரம் மாவட்டம், மண்படம் புனித அருளானந்தர் தேவாலயத்தில் பங்குத்தந்தையாக இருந்தவர் ஜான்ராபர்ட் (46). இவர் 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. அதனடிப்படையில் மாவட்ட குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் விசாரணை செய்து, மண்டபம் காவல்நிலையத்தில் ஜான்ராபர்ட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதனடிப்படையில் 8.8.2022 அன்று ஜான்ராபர்ட் மீது மண்டபம் போலீசார் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை ராமநாதபுரம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் கீதா ஆஜரானார். இவ்வழக்கில் நேற்று முன்தினம் மாவட்ட மகளிர் அமர்வு நீதிமன்ற நீதிபதி கவிதா, ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை, ரூ.9 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

The post சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பங்குத்தந்தைக்கு 2 ஆண்டு சிறை appeared first on Dinakaran.

Tags : Ramanathapuram ,Ramanathapuram District Women's Sessions Court ,John Robert ,Holy Arulananda Church ,Manpadam, Ramanathapuram district ,
× RELATED அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் 42 சவரன்,...