×

வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய பாஜக அரசின் வக்பு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஒன்றுபட்ட சென்னை மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தமைமை தாங்கினார். தேசிய மகளிரணி தலைவர் ஏ.எஸ்.பாத்திமா முசாபர் துவக்க உரையாற்றினார். மாவட்டச் தலைவர்கள் மடுவை எஸ்.பீர் முஹம்மது, கமுதி பி.சம்சுதீன், ஏ.ஹெச். முஹம்மது இஸ்மாயில், யூசுப் குலாம் முஹம்மது, மாவட்டச் செயலாளர்கள் எம். முஹம்மது அபூபக்கர், எம்.என்.எம். இர்பான் சுபேர், கே.கோதர்ஷா, முஸப்பர் அகமது, மாவட்ட பொருளாளர்கள் கௌஸ்பேக், ஏ.எம்.என். காசிம், எம்.சுலைமான் மன்பஈ, எஸ்.ஏ. மாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், திராவிடர் கழக பிரச்சார அணி செயலாளர் அருள்மொழி, ஜமாஅத்துல் உலமா மாநில துணை பொதுச்செயலாளர் கா.மு. இலியாஸ் ரியாஜி ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில நிர்வாகிகள் மில்லத் எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில், எஸ்.ஏ.இப்ராஹிம் மக்கி, பி.அப்துல் காதர், ஹெச்.ருமைஜுல்லாஷாஸ் பைஜி, ஏ.எம்.ஜெய்தூன், எஸ்.எம். ஆலம்கான், மஹபூப் ஷெரீப், வழக்கறிஞர் தஸ்லிம் ஆலிப், மாணவரணி தேசிய பொதுச்செயலாளர் எஸ்.ஹெச். முஹம்மது அர்ஷத் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் மாவட்ட பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கே.எம்.காதர் மொகிதீன் பேசியதாவது: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து அதை நிறைவேற்றினார். அது மட்டுமல்லாமல் திமுக எம்பிக்கள் பாராளுமன்றத்தில் வக்பு சட்டத்துக்கு எதிராக ஒங்கி ஒலிக்க செய்தார். பாராளுமன்ற வரலாற்றில் எதிர்க்கட்சியினர் அனைவரும் இந்த சட்டத்திற்கு எதிர்த்து வாக்களித்துள்ளனர். இது தான் வரலாறு. உச்சநீதிமன்றத்தில் வக்பு திருத்த சட்ட மசோதா தொடர்பான வழக்கில் ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் 95 சதவீதத்திற்கும் அதிகமானோரிடம் கருத்து கேட்டதாக உண்மைக்கு மாறாக பேசியுள்ளார். இந்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் ஆண்களும், பெண்களும், விதிக்கு வந்து போராட தொடங்கியுள்ளனர். நீதிபதிகள் இந்த சட்டத்தில் உள்ள ஒட்டைகளை தெரிந்து கொண்டு வக்பு வாரியத்திற்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க கூடாது என்று அதிரடி உத்தரவு வழங்கியுள்ளனர். உச்சநீதிமன்றம் தீர்ப்பை எப்போதும் முஸ்லிம்கள் மதிப்பார்கள். எனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த தீர்ப்பில் வெற்றி பெறுவோம். அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றார்.

The post வக்பு திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆர்ப்பாட்டம்: அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Indian Union Muslim League ,Chennai ,Union Muslim League of India ,BJP government ,
× RELATED சொல்லிட்டாங்க…