- திமுக
- ஆண்டிப்பட்டி
- தேனி தெற்கு மாவட்டம்
- கம்பம்
- சட்டமன்ற உறுப்பினர்
- ராமகிருஷ்ணன்
- Maharajan
- தெப்பம்பட்டி
- Pichampatti
ஆண்டிபட்டி, ஏப். 18: தேனி தெற்கு மாவட்ட செயலாளர், கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் மற்றும் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் அறிவுறுத்தலின்படி, நேற்று ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள தெப்பம்பட்டி, பிச்சம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பூத் வாரியாக சென்று இல்லம் தோறும் மாணவர் அணி உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி தெற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. கிராமங்களில் உள்ள பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று, இல்லம் தேடி நடந்த உறுப்பினர் சேர்க்கையில், திரளான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி பணிகளையும் நலத்திட்ட உதவிகளையும், தொலைநோக்கு திட்டங்களையும் செய்து வருவதால் மாணவ, மாணவிகள் அதிகளவில் ஆர்வத்துடன் வந்து திமுக மாணவர் அணியில் இணைந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஒன்றிய மாணவர் அணியை சேர்ந்த குமார், சரவணன் மற்றும் கிளை செயலாளர்கள் வேலுச்சாமி, சின்னச்சாமி, முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post ஆண்டிபட்டியில் திமுக மாணவரணி உறுப்பினர் சேர்க்கை appeared first on Dinakaran.
