- Markandeyan
- சட்டமன்ற உறுப்பினர்
- கல்குமி
- சீமை
- விளாத்திகுளம்
- மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ
- கல்குமி கிராமம்
- விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம்
- விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம்
- தின மலர்
விளாத்திகுளம், ஏப்.18: விளாத்திகுளம் அருகே கல்குமி கிராமத்தை சுற்றிலும் பயன்தரும் மரக்கன்றுகள் நடும் பணி தொடர்பாக மார்க்கண்டேயன் எம்எல்ஏ ெபாதுமக்களிடம் ஆலோசனை நடத்தினார். விளாத்திகுளம் மரங்கள் மக்கள் இயக்கம் மற்றும் விளாத்திகுளம் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து விளாத்திகுளம் தொகுதி முழுவதும் பொது இடங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை ஆற்றிவிட்டு மக்களுக்கு பயன்தரும் பல்வேறு மரங்களை நட்டி பராமரித்து வருகிறது. மேலும் மரம் வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது.
இந்நிலையில் விளாத்திகுளம் வட்டம், கல்குமி கிராமத்தை சுற்றிலும் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி பயனுள்ள மரங்கள் நடுவது தொடர்பாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ கிராம மக்களுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை கேட்டறிந்தார். விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர்கள் மேற்கு அன்புராஜன், கிழக்கு சின்னமாரிமுத்து, ஆற்றங்கரை முன்னாள் ஊராட்சி தலைவர் சீத்தாராமன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஆகாஷ்பாண்டியன், கிளைச் செயலாளர் கருப்பசாமி, என்.வேடப்பட்டி முன்னாள் ஊராட்சி தலைவர் செல்லக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post சீமை கருவேல மரங்களை அகற்றிவிட்டு கல்குமி கிராமத்தில் பயன்தரும் மரக்கன்றுகள் நடும்பணி ெபாதுமக்களுடன் மார்க்கண்டேயன் எம்எல்ஏ ஆலோசனை appeared first on Dinakaran.
