×

சட்டீஸ்கரில் 22 நக்சல்கள் கைது

பிஜப்பூர்: சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் 22 நக்சல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஊசூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட டெக்மெட்லா கிராமத்தில் சிஆர்பிஎப் மற்றும் கோப்ரா பிரிவினர் இணைந்து நடத்திய தீவிர நடவடிக்கையில் 7 நக்சல்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் பெல்ச்சார் கிராமத்தில் இருந்து 6 நக்சல்களும், நீலாஸ்நர் காவல்நிலையத்திற்குட்பட்ட கந்தகர்கா கிராமத்தில் 9 நக்சல்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் இரு வேறு போலீஸ் குழுவினர் ஈடுபட்டனர். இவர்களிடம் இருந்து டிபன்பாக்ஸ் வெடிகுண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், எலக்ட்ரிக் ஒயர்கள், பேட்டரிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

The post சட்டீஸ்கரில் 22 நக்சல்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Naxals ,Chhattisgarh ,Bijapur ,Bijapur district ,CRPF ,Cobra ,Tekmetla ,Usur ,Belchar… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!