×

தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதான்…! தல, தளபதி பேன்ஸ் ரெடியா?

சென்னை: தளபதி 68 படத்திற்கு சிஎஸ்கே என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்யுடன் நடிப்பது உறுதி ஆகிவிட்டால் முன்னணி நடிகை பட்டியலில் இணைந்து விடுவார்.

இதனிடையே தற்போது அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கப்போகிறார்கள் என்பது குறித்த ஹாட் அப்டேட் தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீ போல் பரவிய வண்ணம் உள்ளது. அதன்படி தளபதி 68 படத்திற்கு சிஎஸ்கே என பெயரிடப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருகிறது. வெங்கட் பிரபுவை போல் நடிகர் விஜய்யும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர் என்பதால் இப்படத்திற்கு இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

The post தளபதி 68 படத்தின் தலைப்பு இதுதான்…! தல, தளபதி பேன்ஸ் ரெடியா? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Chennai ,CSK ,Vijay ,Lokesh Kanakaraj ,Leo ,trisha ,sanjay dutt ,arjun ,mishkin ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க விஜய் கட்சி இலக்கு