×

நாசா, இஸ்ரோ இணைந்து தயாரிக்கும் “நிசார்” செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு: விண்ணில் ஏவுவது ஒத்திவைப்பு!!

பெங்களூரு : நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரிக்கும் புவி மேற்பரப்பு கண்காணிப்பு செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதால் இந்த ஆண்டு இறுதியால் தான் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இணைந்து பூமியின் மேற்பரப்பு மாற்றங்களை கண்காணிப்பதற்காக நாசா – இஸ்ரோ “செயற்கை துளை ரேடார்” நிசார் என்ற செயற்கைக்கோளை தயாரித்துள்ளது. இது அதிநவீன பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளாகும். இதன் மூலம் பூமியின் சுற்றுசூழல் அமைப்புகள்,காலநிலை மாற்றம், சுற்றுசூழல் மாற்றங்கள், வள மேலாண்மை மற்றும் இயற்கை பேரழிவுகள் குறித்த முக்கியமான நுண்ணறிவு தகவல்களையும் வழங்கும்.

இதனை கடந்த 2023ம் ஆண்டு தொடக்கத்தில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டது. ஆனால் அப்போது நிசார் செயற்கைக்கோளில் உள்ள பூமி மற்றும் ரேடார் ஆண்டெனா பிரதிபலிப்பானைப் பயன்படுத்துவதற்கு சாதகமான நிலை இல்லாத கிரகணப் பருவம் நிலவியதால் விண்ணில் செலுத்துவது தடைபட்டது. மேலும் சில தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக மே மற்றும் ஜூன் மாதத்தில் விண்வெளியில் ஏவப்பட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இந்தியா – அமெரிக்கா கூட்டு ஏவுதல் மீண்டும் இந்த ஆண்டு இறுதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சோதனையின் போது, நிசார் செயற்கைக்கோளில் தொழில்நுட்ப பிரச்சனை இருப்பது மீண்டும் தெரியவந்ததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post நாசா, இஸ்ரோ இணைந்து தயாரிக்கும் “நிசார்” செயற்கைக்கோளில் தொழில்நுட்ப கோளாறு: விண்ணில் ஏவுவது ஒத்திவைப்பு!! appeared first on Dinakaran.

Tags : NASA ,ISRO ,Bengaluru ,Earth ,Indian Space Research Organization… ,Dinakaran ,
× RELATED 2030ம் ஆண்டிற்கான தொலைநோக்கு...