
சென்னை: பாமகவில் இருந்த சலசலப்பு சரியாகிவிட்டது என ஜி.கே.மணி கூறினார். தமிழக சட்டப்பேரவை கடந்த 5 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை கூடியது. அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி நிருபர்களை சந்தித்து பேசியதாவது: இளவேனிர் காலம், வசந்த விழாவாக, இந்திர விழாவாக கொண்டாடுவார்கள். பாமக சார்பில் மாமல்லபுரத்தில் 11ம் தேதி பிரமாண்டமான மாநாடு நடத்தப்பட உள்ளது. 2 தலைவர்களும் கலந்து கொள்வார்கள். ராமதாஸ், அன்புமணி இடையே சிறு சலசலப்பு இருந்தது. இது சரியாகிவிட்டது. இதனால் பாமகவில் இருந்த சலசலப்பும் சரியாகிவிட்டது.
விரைவில் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து நல்ல செய்திகளை தெரிவிப்பார். மே 11ம் தேதி மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இருவரும் கலந்துகொண்டு பேசுவார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக தொடர்கிறதா? அதிமுகவுடன் பாஜ இணைந்தது ஆகிய கேள்விகளுக்கு ராமதாஸ் பதில் அளிப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post பாமகவில் இருந்த சலசலப்பு சரியாகிவிட்டது: ஜி.கே.மணி தகவல் appeared first on Dinakaran.
