- சென்னை
- மார்க்சிச கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு நிறைவே
- மடுகூர் ராமலிங்கம்
- மாநில நிர்வாகக் குழு
- K.Balakrishnan
- உ. வாசுகி
- மத்திய குழு
- என் குணசேகரன்
- கே. பாலபாரதி
- மாநில செயலாளர்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு செயற்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமை வகித்தார். கூட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.குணசேகரன், கே.பாலபாரதி, மாநில செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்: கடந்த சில வாரங்களாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூலிக்கு நெசவு செய்யும் தறி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.
மின் கட்டண உயர்வு, நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்த பிரிவினருக்கு வழங்க சம்மதித்து செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில் கூலி உயர்வினை நீண்ட காலமாக பெரும் உற்பத்தியாளர்கள் அமலாக்கவில்லை, மாறாக, குறைத்து உள்ளனர். இது நியாயமற்றதாகும். இதில் ஜவுளித்துறை அமைச்சரும், முதல்வரும் தலையிட்டு இதை தடுத்து தொழில் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். வேலை நிறுத்தம் செய்து வரும் இந்த சிறு குறு உற்பத்தியாளர்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், வேலை நிறுத்தம் செய்து வரும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
The post வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கூலி நெசவு தறி உரிமையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: மார்க்சிஸ்ட் தீர்மானம் appeared first on Dinakaran.
