×

தமிழ்நாட்டில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும்


புதுடெல்லி: இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா கூறியதாவது: இந்த ஆண்டு நான்கு மாத (ஜூன் முதல் செப்டம்பர்) பருவ மழை காலத்தில் இயல்பை விட கூடுதல் மழைப் பெய்யக் கூடும். நீண்டகால சராசரி மழை அளவான 87 சென்டி மீட்டரை விட, இந்த ஆண்டு 105 சதவீதம் அதிக மழைப்பொழிவு இருக்கும்.

அதேநேரத்தில், தமிழ்நாடு, வடகிழக்கு பிராந்தியத்தின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்புள்ளது. மராத்வாடா, அதை ஒட்டிய தெலங்கானா பகுதிகளில் இம்முறை வழக்கத்தை விட அதிகமாக பருவமழை பெய்யும். தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை நீடிக்கும். இவ்வாறு கூறினார்.

The post தமிழ்நாட்டில் பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,New Delhi ,India Meteorological Department ,Mrityunjay Mohapatra ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு