- மைசூர்
- புதூர்
- மங்களூர்
- மைசூர் மாவட்டம்
- பிரியாபட்டனா
- குடாகு மாவட்டம் மடிகேரி
- தக்ஷினா கன்னட மாவட்டம்
- மடிகேரி
- தேவரகோலி
- சுல்லியா
- தின மலர்
மங்களூரு: மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் இருந்து குடகு மாவட்டம் மடிகேரி வழியாக தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூருக்கு ஒரு கார் வந்து கொண்டிருந்தது. மடிகேரியை கடந்து சுள்ளியா அருகே தேவரகொல்லி பகுதியில் கார் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. சிறிது நேரத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காரில் இருந்த 3 பேரும் லேசான காயமடைந்தனர். விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து வந்து, காரில் சிக்கிய 3 பேரையும் மீட்டனர். அப்போது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது.
சந்தேகமடைந்த பொதுமக்கள், மடிகேரி போலீசாருக்கு தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். அவர்கள் புத்தூரை சேர்ந்த பஸ்ருதீன், முஸ்தாக், ஜாபீர் என்பதும், அவர்கள் பிரியப்பட்டணாவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்து கஞ்சா, கார் ஆகியவை பறிமுதல் செய்தனர். ெதாடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post மைசூருவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது: கார் விபத்துக்குள்ளானதால் சிக்கினர் appeared first on Dinakaran.
