×

நிலம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!!

டெல்லி: நிலம் வாங்கிய விவகாரம் தொடர்பாக பிரியங்கா காந்தி கணவர் ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. 2008ல் 3.5 ஏக்கர் நிலத்தை ரூ.7.5 கோடி வாங்கிய டி.எல்.எஃப்.க்கு ரூ.58 கோடிக்கு வதேரா விற்றுள்ளார். நிலம் வாங்கி விற்றதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை குற்றச்சாட்டிய நிலையில், நில விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

The post நிலம் வாங்கிய விவகாரம் தொடர்பாக ராபர்ட் வதேராவுக்கு அமலாக்கத்துறை சம்மன்!! appeared first on Dinakaran.

Tags : Enforcement Directorate ,Robert Vadra ,Delhi ,Priyanka Gandhi ,Vadra ,DLF ,Dinakaran ,
× RELATED குடியரசு தின விழாவில் பங்கேற்க...