×

ஐசிசி கமிட்டி தலைவராக கங்குலி நியமனம்

லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி), ஆடவர் கிரிக்கெட் கமிட்டி தலைவராக இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். ஐசிசி ஆடவர் கிரிக்கெட் கமிட்டி தலைவராக, அனில் கும்ப்ளேவுக்கு பின், 2021ல் முதன் முதலாக, கங்குலி (52) நியமிக்கப்பட்டார். அவர், நடப்பு ஆண்டிலும் அந்த கமிட்டிக்கு தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

கமிட்டியின் உறுப்பினர்களாக, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மணன், ஆப்கானிஸ்தான் வீரர் ஹமித் ஹசன், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டெஸ்மான்ட் ஹெயின்ஸ், தென் ஆப்ரிக்கா ஒரு நாள் கிரிக்கெட் அணி கேப்டன் டெம்பா பவுமா, இங்கிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஜோனாதன் ட்ராட் ஆகியோர் உள்ளனர்.

The post ஐசிசி கமிட்டி தலைவராக கங்குலி நியமனம் appeared first on Dinakaran.

Tags : Ganguly ,ICC Committee ,London ,Sourav Ganguly ,International Cricket Council ,ICC ,Men's Cricket Committee ,ICC Men's Cricket Committee ,Anil Kumble ,Dinakaran ,
× RELATED நான்காவது டி20 போட்டியில் இன்று...