- ஆர்எஸ்எஸ் நிறுவனம் பி. சி.
- கவர்னர்
- ஆர்.என்.ரவி
- துரை
- விகோ
- எம்பி
- திரிஷி
- அம்பேத்கர்
- தலை
- துரி விகோ எம்பி
- ஸ்ரீ அரிஸ்டோ ரவுண்டனா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- . விகோ
திருச்சி: அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள அவரது சிலைக்கு மதிமுக சார்பில் தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ எம்பி இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக ஆர்எஸ்எஸ்சின் கொள்கை பரப்பு செயலாளராகவே செயல்பட்டு வருகிறார். ஒரு கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்னைகளை தீர்க்க அக்கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் கூறுவதை கட்சி தலைமை கேட்க வேண்டும். அதேபோல் கட்சி தலைமைக்கு துரோகம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அது புற்றுநோய் போல் பரவி இயக்கத்தையே அழித்து விடும். நாங்கள் திமுக கூட்டணியில் வலுவாக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
The post ஆர்எஸ்எஸ் கொ.ப.செ. ஆளுநர் ஆர்.என்.ரவி: துரை.வைகோ எம்பி தாக்கு appeared first on Dinakaran.
