×

அதிமுக-பாஜ கூட்டணி நேச்சுரல்ஸ் அலையன்ஸ்: – சொல்கிறார் வாசன்

மதுரை: மதுரை யில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுக – பாஜ கூட்டணி மீண்டும் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த கூட்டணி ஒரு நேச்சுரல்ஸ் அலையன்ஸ். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் இருக்கும்போது சந்தித்தேன். அப்போது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு அடித்தளமாகவும், கூட்டணியை பலப்படுத்தக்கூடிய நிலவரம் குறித்தும் அவரிடம் பேசினேன். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. ஏழ்மையான இஸ்லாமியர்கள் உயர்வுக்காகவே வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து வாக்களித்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post அதிமுக-பாஜ கூட்டணி நேச்சுரல்ஸ் அலையன்ஸ்: – சொல்கிறார் வாசன் appeared first on Dinakaran.

Tags : AIADMK- ,BJP ,Vasan ,Madurai ,Tamil Nadu Congress ,G.K. Vasan ,AIADMK ,Tamil Nadu ,Union Home Minister ,Amit Shah ,Chennai.… ,
× RELATED சொல்லிட்டாங்க…