- பாஜா நிர்பந்தா கூட்டணி
- விஜய் காட்டம் டாகு
- சென்னை
- தவேகா
- விஜய்
- பஹ்ஜா
- ஆடமுவா
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- ஆதிமுகா
- விஜய் கடம் தகு
சென்னை: தவெக தலைவரும் நடிகருமான விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தன்னுடைய பழைய பங்காளியான அதிமுகவை பகிரங்க கூட்டாளியாக பாஜ மீண்டும் கைப்பிடித்துள்ளது. இதில் ஒன்றும் பெரிய ஆச்சரியமில்லை. பிளவுவாத சக்திகளுக்கு சாமரம் வீசிய காரணத்தாலேயே, ஏற்கனவே மூன்று முறை தமிழ்நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒரு நிர்பந்த கூட்டணியே இப்போது ஏற்பட்டுள்ளது. இது நாம் சொல்லித்தான் மக்களுக்கு தெரிய வேண்டியதில்லை.
ஏற்கனவே நமது கட்சியின் பொதுக்குழுவில் தெரிவித்தபடி 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் உண்மையான போட்டியாகும். மதச்சார்பற்ற சமூகநீதி கொள்கை உறுதியுடன் தவெக வீறுநடை போடும். இவ்வாறு விஜய் அறிக்கையில் கூறியுள்ளார்.
The post அதிமுக – பாஜ நிர்பந்த கூட்டணி: நடிகர் விஜய் கடும் தாக்கு appeared first on Dinakaran.
