×

அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப வல்லுநருடன் கமல்ஹாசன் சந்திப்பு

சென்னை: உலகம் முழுவதும் ஏஐ என்ற அதிநவீன தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இதுகுறித்து படிக்க அமெரிக்கா சென்ற கமல்ஹாசன், சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவன தலைமையக சிஇஓ அரவிந்த் சீனிவாஸை சந்தித்து, ஏஐ தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தார்.

இதுகுறித்து நேற்று கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ‘சினிமா முதல் சிலிக்கான் வரை அனைத்தும் மாறிவிட்டது. கருவி மாறலாம். ஆனால், அடுத்து என்ன என்பது மாறாது. இதுபற்றி அறிந்துகொள்ள இருக்கும் ஆர்வம்தான் என்னை பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் அலுவலகத்துக்கு அழைத்து சென்றது’ என்று குறிப்பிட்டுள்ளார். அரவிந்த் சீனிவாஸ் கூறுகையில், ‘கமல்ஹாசனை சந்தித்ததில் அதிக மகிழ்ச்சி’ என்றார்.

The post அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்ப வல்லுநருடன் கமல்ஹாசன் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Kamal Haasan ,America ,Chennai ,Arvind Srinivas ,CEO ,Perplexity AI ,San Francisco ,Dinakaran ,
× RELATED கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்;...