×

வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு: முத்தரசன் பேட்டி

திருத்துறைப்பூண்டி: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று அளித்த பேட்டி: அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு வருகிற 15ம்தேதி முதல் 17ம் தேதி வரை நாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது. கேரள வேளாண் அமைச்சர் பிரசாத் தொடங்கி வைக்கிறார். தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

முன்னதாக நாகப்பட்டினம் அவுரி திடலில் தொடங்கும் பேரணியில் ஒரு லட்சம் விவசாயிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டு நிறைவு நாளில் பொது செயலாளர் டி.ராஜா மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த விவசாய சங்க நிர்வாகிகளும் பங்கேற்கின்றனர். விவசாயிகளின் நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்தும், கடன் சுமையில் தத்தளித்து வரும் விவசாயிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் வாங்கிய அனைத்து கடன்களையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை நாகையில் அகில இந்திய விவசாயிகள் சங்க மாநாடு: முத்தரசன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : All India Farmers' Union Conference ,Nagapattinam ,Mutharasan ,Thiruthuraipoondi ,Communist of India State Secretary ,Thiruthuraipoondi, Tiruvarur district ,Kerala ,Minister ,Prasad… ,Dinakaran ,
× RELATED நிலை நிறுத்தும் பாதையில் இருந்து...