- விருதுநகர்-அருப்புக்கோட்டை சாலை ரயில்
- விருதுநகர்
- ராமமூர்த்தி சாலை
- அருப்புக்கோட்டை சாலைகள்
- காமராஜ் பைபாஸ் சாலை
- தந்திமரத்தெரு
- வடியன் வீதிகள்
- தின மலர்
விருதுநகர், ஏப். 11: விருதுநகரின் மையத்தில் ரயில்பாதை செல்வதால் 5 ரயில்வே கேட்டுகள் உள்ளன. இதில் ராமமூர்த்தி ரோடு, அருப்புக்கோட்டை ரோடுகளில் ரயில்வே மேம்பாலங்களும், காமராஜர் பைபாஸ் ரோட்டில் தரைப்பாலமும், தந்திமரத்தெரு, வாடியான் தெருக்களில் ரயில்வே கேட்டுகளும் உள்ளன. இரு பகுதிகளிலும் இருக்கும் மக்கள் தினசரி ஒன்றுக்கு மேற்பட்ட முறை ரயில்வே லையனை கடந்தாக வேண்டும். இதனால் ராம மூர்த்தி ரோடு, அருப்புக்கோட்டை ரோடு ரயில்வே மேம்பாலங்களில் போக்குவரத்து அதிகம்.
அருப்புக்கோட்டை ரோடு ரயில்வே மேம்பாலம் வளைந்து நெளிந்து இருப்பதாலும், ராமமூர்த்தி ரோடு மேம்பாலம் சாய்வு தள அமைப்பு குறைவாக செங்குத்தான அமைப்பில் இருப்பதாலும் தினசரி விபத்துக்கள் தொடர்கிறது. மற்ற நகரங்களில் இல்லாத வகையில் விருதுநகரில் இரு மேம்பாலங்களும் விபத்துகளை சந்திக்கும் மேம்பாலங்களாக உள்ளன.
The post விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோடு ரயில்வே மேம்பால பக்கவாட்டு கம்பி தடுப்புகள் பாதியில் நிக்குது: முழுமையாக அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.
