- கல்லல் பஞ்சாயத் ஒன்றியம்
- அமைச்சர்
- பெரியகருப்பன்
- திருப்புத்தூர்
- திருப்புத்தூர் சட்டமன்றம்
- கிராம அபிவிருத்தி திணைக்களம்
- கூட்டுறவு
- கே.ஆர்.பெரியகருப்பன்
- தின மலர்
திருப்புத்தூர், ஏப். 11: திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.72.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிககு கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார்.
திருப்புத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கல்லல் ஊராட்சி ஒன்றியம், சிராவயல் ஊராட்சி, கிளாமடம் கிராமத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.49.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடமும், குன்றக்குடி ஊராட்சிக்குட்பட்ட மயிலாடும்பாறை தெருவில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கமும்,
தட்டட்டி ஊராட்சிக்குட்பட்ட கொரட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் மஞ்சுவிரட்டு திடலில் ரூ.7.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விருந்தினர் மேடையும், இளங்குடி ஊராட்சிக்குட்பட்ட கருகுடி கிராமத்தில் ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உணவு அருந்தும் கூடம் என ஆக மொத்தம் ரூ.72.30 லட்சம் மதிப்பீட்டிலான 4 வளர்ச்சி திட்டப் பணிகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கென திறக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவ ட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வானதி, கல்லல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இரத்தினவேல், மகாலிங்கம், திருப்புத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், திமுக மாநில பொதுககுழு உறுப்பினர் பள்ளத்தூர் கே.எஸ்.ரவி, கல்லல் திமுக ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், கண்டரமாணிககம் வளர்ச்சிக்குழு தலைவர் மணிகண்டன் செட்டியார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மஞ்சரி லெட்சுமணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post கல்லல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.72.30 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு: அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.
