- ஞானாம்பிகை அரசு கல்லூரி
- மயிலாடுதுறை
- ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரி
- தர்மபுரம்
- தமிழ்நாடு மொபைல் செயலி
- போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றம்
- தின மலர்
மயிலாடுதுறை, ஏப். 11: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரி சார்பில், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு மொபைல் செயலி குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்றத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ராமச்சந்திர ராஜா தலைமை வகித்து பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தார். கோட்ட கலால் அலுவலர் சுகுமாரன் முன்னிலை வகித்தார். பேரணியில் மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு போதைப்பொருள்களுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு முழக்கங்களை எழுப்பிச் சென்றனர்.
அப்போது, பொதுமக்கள் சுயவிபரம் இன்றி புகார் அளிப்பதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ள போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு (ட்ரக் ஃப்ரீ தமிழ்நாடு) மொபைல் செயலி குறித்த துண்டு பிரசுரங்களை மாணவிகள் வழிநெடுகிலும் பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியை கல்லூரியின் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு மன்ற ஒருங்கிணைப்பாளர் வைதேகி ஒருங்கிணைத்தார். தாவரவியல் துறைத்தலைவர் ராஜேஷ் உள்ளிட்ட பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
The post ஞானாம்பிகை அரசு கல்லூரி சார்பில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.
