- பஜாஜ்
- திமுகா
- அமித் ஷா
- சென்னை
- திமுக அமைப்பின் செயலாளர் ஆர்.
- பாரதி
- திமுக்வா
- திமுகா
- ஐரோப்பிய ஒன்றிய
- தின மலர்
சென்னை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கை:
“திமுகவின் ஊழலால் தமிழக மக்கள் சலிப்படைந்துள்ளனர். அதனால்தான் திமுக, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை எழுப்பி தங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை மூடி மறைக்கப் பார்க்கிறது” எனப் பொய்யைச் சொல்லியிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா.
அப்படிதான் 2018 ஜூலை 9 சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அமித்ஷா ‘நாட்டிலேயே ஊழல் அதிகமாக உள்ள மாநிலமாக தமிழகம் உள்ளது’ என்றார். அப்போது எடப்பாடி ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. அடுத்த ஆண்டே அந்த எடப்பாடி பழனிசாமியோடுதான் 2019 நாடாளுமன்ற தேர்தலை அமித்ஷா சந்தித்தார். அதன் பிறகு 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்தது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் நடந்த ஊழல்கள், ரெய்டுகள், சிபிஐ விசாரணைகள், அமலாக்கத் துறை சோதனைகள் எல்லாமே நாடகம்தான்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பணிய வைக்கத்தான் அவை பயன்படுத்தப்பட்டன. ஊழலை ஒழிக்கவில்லை. பாஜகவின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன.
The post பாஜவின் கூட்டணிக்கு ஊன்று கோலாக ஊழல்கள்தான் இருக்கின்றன: அமித்ஷாவுக்கு திமுக பதிலடி appeared first on Dinakaran.
