×

வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலங்குடி அரசு பள்ளியில் நீட், ஜே.இ.இ., 4 நாட்கள் சிறப்பு வகுப்பு

புதுக்கோட்டை, ஏப்,10: புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் தமிழ்நாடு மாநிலத் திட்டக்குழு வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் திருவரங்குளம் ஒன்றியம், ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆலங்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, வல்லத்திராக்கோட்டை ராமசாமி தெய்வானையம்மாள் அரசு மேல்நிலைப்பள்ளி, வெண்ணாவல்குடி அரசு மேல்நிலைப்பள்ளி, மாஞ்சான்விடுதி அரசு மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கொத்தமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திருவரங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரையப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் 120 மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ வழிகாட்டல் வகுப்புகள் மாவட்ட கலெக்டர் அருணா உத்தரவின்பேரிலும், முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலுடன் நேற்று முதல் தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் ரெத்தினக்குமார் தலைமை தாங்கி நீட், ஜே.இ.இ வழிகாட்டல் வகுப்புகளை தொடங்கி வைத்து வழிகாட்டல் வகுப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி பயிற்சி வகுப்பினை சிறப்பாக பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( மேல்நிலை) முருகையன், பள்ளித்துணை ஆய்வாளர்.வேலுச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். பாடக்கருத்தாளர்களாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்காந்தி , சிராஜூதின், சிவசாமி, திருமேனிநாதன், நாடிமுத்து ஆகியோர் நேற்று தொடங்கி 12,16,17 ஆகிய தேதிகளில் பயிற்சி அளிக்க உள்ளனர். ஏற்கனவே இம்முறையில் கறம்பக்குடி ஒன்றியத்தினை சேர்ந்த 7 அரசு மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த மேல்நிலை வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு 4 நாட்கள் நீட்,ஜே.இ.இ வழிகாட்டல் வகுப்புகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து இம்முறையில் வடகாடு அரசு மேல்நிலைப்பள்ளியில் வருகிற 19,21,22,23 ஆகிய தேதிகளில் நீட், ஜே.இ.இ வழிகாட்டல் வகுப்புகள் நடைபெறுகிறது.

The post வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆலங்குடி அரசு பள்ளியில் நீட், ஜே.இ.இ., 4 நாட்கள் சிறப்பு வகுப்பு appeared first on Dinakaran.

Tags : JEE ,Alangudi Government School ,Pudukottai ,Tamil Nadu State Planning Commission ,Pudukottai District School Education Department ,Alangudi Government Boys’ Higher Secondary School ,Alangudi Government Girls’ Higher Secondary School ,Vallathirakottai ,Ramasamy ,Theivanayammal… ,Dinakaran ,
× RELATED ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.26 கோடி...