×

ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

மதுரை, ஏப். 10: மதுரையில் மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வக்பு திருத்தச்சட்டத்தை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதன்படி மதுரை முனிச்சாலையில் உள்ள பள்ளிவாசல் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.முருகன் தலைமை வகித்தார்.

தொழிற்சங்க செயலாளர் நந்தாசிங், மாவட்ட செயலாளர் சேது, மாதர் சம்மேளன நிர்வாகி ராஜலட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராகவும், வக்பு திருத்தச்சட்டத்தை திரும்ப பெறக்கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post ஒன்றிய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Marxist ,Union government ,Madurai ,Marxist Communist Party ,Madurai Munichalai… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை