×

சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக கார்த்திகேயன் பதவியேற்பு

சென்னை: சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக கார்த்தியேன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக சுதாகர் பணியாற்றி வந்தார். அவர் ஒன்றிய அரசு பணிக்கு சென்றதால், தமிழக உள்துறை செயலாளர் தீரஜ்குமார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் ஐஜியாக பணியாற்றி வந்த கார்த்திகேயனை சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நியமனம் செய்து உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரியான கார்த்திகேயன், வேப்பேரியில் உள்ள சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போக்குவரத்து கூடுதல் கமிஷனராக நேற்று காலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு கமிஷனர் அருண் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

The post சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக கார்த்திகேயன் பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Karthikeyan ,Chennai Transport ,Chennai ,Chennai Metropolitan Transport ,Sudhakar ,Union Government ,Tamil ,Nadu ,Home Secretary ,Dheerajkumar ,IG ,Prohibition Enforcement Division… ,Commissioner ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே வனப்பகுதியில் 2 ராக்கெட் லாஞ்சர்கள் கண்டுபிடிப்பு