×

இவங்க தண்ணீருக்கு இழுப்பாங்க… அவங்க மேட்டுக்கு இழுப்பாங்க… அதிமுகவும்…. பாஜவும்… தவளை, ஓநாய்: செங்கோட்டையன் ‘கலாய்’, எனக்கு வழிகாட்டி, என் ரத்தம் எல்லாம் விஜய் என கண்ணீர்

திருப்பூர்: தவளை தண்ணில இழுக்குமாம், ஓநாய் மேட்டுக்கு இழுக்குமாம், அந்த கதையாய் உள்ளது பாஜ-அதிமுக கூட்டணி என தெரிவித்த செங்கோட்டையன், எனக்கு வழிகாட்டி, என்ன ரத்தம் எல்லாம் விஜய் என கண்ணீர் கலங்கினார். திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் தவெக ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது: அதிமுகவில் இருந்து நீக்கியபோது வழி தெரியாமல் இருந்த போது, எனக்கு வழிகாட்டியவர் விஜய்.

நான் இன்றைக்கு சொல்கிறேன், என் உடம்பில் ஓடுகிற ஒவ்வொரு துளி ரத்தமும் விஜய்க்காக தான் என கூறி மேடையில் செங்கோட்டையன் கண் கலங்கினார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சம்பிரதாயத்திற்கு பார்த்தோமே தவிர பேச்சு வார்த்தை நடக்கவில்லை. அதிமுக – பாஜ இடையே இரு வேறு கருத்துக்கள். தவளை தண்ணில இழுக்குமாம், ஓநாய் மேட்டுக்கு இழுக்குமாம், அந்த கதையாய் உள்ளது பாஜ-அதிமுக கூட்டணி.

மெகா கூட்டணி அமைய போகிறது என்றார் ஈபிஎஸ். ஆனால் ஒரு கூட்டணியும் வரவில்லை. இதை எல்லாம் அவரிடம் கேட்டோம். ஒரு நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்றலாம், ஆனால் பல நாள் பொய் சொல்லி ஒருவனை ஏமாற்ற முடியாது. தமிழகத்தில் விஜயை முதல்வராக ஏற்று கொண்டு யார் வேணாலும் கூட்டணிக்கு வரலாம். ஆனால் விஜயை தாண்டி யாராலும் முதலமைச்சர் என்ற கனவை கூட காண முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

* ‘பொங்கலுக்குள் தவெக கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி’
பெருந்துறையில் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், ‘பொங்கலுக்குள் இன்னும் பல முன்னாள் அதிமுக அமைச்சர்கள் தவெகவில் இணைய உள்ளனர். அதற்கான காட்சியை நீங்கள் பார்க்க இருக்கிறீர்கள். ஓபிஎஸ், டிடிவி.தினகரன் ஆகியோர் தவெக கூட்டணியில் இணைவதை விரைவில் எதிர்பார்க்கலாம். பொங்கலுக்கு முன்பே இது நடைபெறும்’ என்றார்.

 

Tags : Bajwum ,Wolf ,Kalai ,Vijay ,THIRUPPUR ,SENKOTTAYAN ,BAJA-ATEMUGA ALLIANCE ,Dweka ,Tiruppur District Kangaya ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள்...