×

அமமுக வேட்பாளர் அறிவிப்பு: கூட்டணிக்கு பேரமா? டிடிவி பரபரப்பு பேச்சு

திருச்சி: திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: விஜய்க்காக உயிரையும் விடுவேன் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைக்கு தான் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்த போது தனக்கு ஒரு கட்சியில் அங்கீகாரம் கிடைத்திருப்பதாக அவர் பெருமையா நினைப்பதாகதான் நான் பார்க்கிறேன் என்றார்.

பின்னர், நேற்றிரவு முசிறியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ ராஜசேகரனை அறிமுகம் செய்து வைத்து டிடிவி.தினகரன் பேசுகையில், ‘நமது கொள்கைக்கு உடன்படும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம். மற்ற கட்சிகளைப் போல 50 இடங்கள், 80 இடங்கள் வேண்டும் என கட்டாயப்படுத்தி நிர்பந்தம் செய்ய மாட்டோம். எதார்த்த சூழலை உணர்ந்து கூட்டணி தர்மத்தின்படி செயல்படுவோம். அமமுக-வின் வளர்ச்சி 50, 75 ஆண்டுகளைக் கடந்த கட்சிகளை விட, வெறும் 8 ஆண்டுகளில் அமமுக பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.

200 தொகுதிகளில் கட்சி வலிமையாக உள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் வரும் ஆட்சியில் நிச்சயம் பங்கு பெறும். தகுதியுள்ள வேட்பாளர்களுக்கு கண்டிப்பாக வாய்ப்பு வழங்கப்படும். அவர்களின் வெற்றிக்கு நான் முழுமையாகத் துணை நிற்பேன். கூட்டணி தர்மத்தை மதித்து, யாருக்கும் பாதிப்பில்லாமல் எதார்த்தமாகச் செயல்படுவோம் என்றார். கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில், எந்த கூட்டணி என்று உறுதியாகாத நிலையில், அமமுக வேட்பாளரை டிடிவி அறிவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : AMMK ,TTV ,Trichy ,general secretary ,Dinakaran ,Sengottaiyan ,Vijay ,
× RELATED தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள்...