×

புதுக்கோட்டையில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.9: ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி புதுக்கோட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு வக்ஃப் திருத்த சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் இஸ்லாமிய அமைப்புகளும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வரக்கூடிய நிலையில் நாடு முழுவதும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.அதன் ஒரு பகுதியாக, நேற்று புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட சின்னப்பா பூங்காவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்டோர் முழக்கங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

The post புதுக்கோட்டையில் விசிக கண்டன ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : VKC ,Pudukkottai ,Liberation Tigers ,Tamil ,Nadu ,Union Government ,Union BJP government ,
× RELATED அரசு பேருந்தில் போகும் ஊர் குறித்த தகவல் இல்லாததால் பயணிகள் அவதி