×

மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு; விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம்

மயிலாடுதுறை, ஏப். 9: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. தமிழக அரசின் நிவாரணம் உள்ளிட்ட நலத்திட்டங்களை விவசாயிகள் பெற வேண்டும் என்றால் மத்திய அரசால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டை பெற வேண்டும் இதற்கு குத்தகை நிலங்களில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அடையாள அட்டை மறுக்கப்படுகிறது. டெல்டா மாவட்டங்களில் ஆதீனம் மற்றும் மடங்கள் கோயில்களுக்கு சொந்தமான சாகுபடி செய்யும் விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக 25 சதவீத விவசாயிகள் கூட அடையாள அட்டை பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் நிபந்தனையின்றி அடையாள அட்டை வழங்க வேண்டும், 50000 ஏக்கரில் செயல்பட்டுள்ள உளுந்து பயிறு செடிகள் மஞ்சள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதற்கு உரிய வழிகாட்டுதல் வழங்கி நிவாரணம் வழங்க வேண்டும், ஆதீனங்களுக்கு சொந்தமான குத்தகை விவசாயிகளின் விற்பனை செய்வதை தடுத்து நிறுத்தி அறநிலையத்துறை கண்காணிப்பில் கொண்டு வந்து விட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமை வகித்தார். இதில் தேசிய நதி நீர் இயக்கங்கள் சங்கம் இயற்கை விவசாயி ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாய சங்க முருகன், ஒருங்கிணைப்பு சீனிவாசன் மற்றும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், தென்னிந்திய தேசிய நதிகள் ஒருங்கிணைப்பு இயக்கம், தஞ்சை காவிரி ஒருங்கிணைப்பு குழு, தேசிய நதிநீர் இணைப்பு சங்கம், டெல்டா பாசனதாரர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் பொறுப்பாளர்கள் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

The post மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகம் முன்பு; விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai Collector's Office ,Farmers' Association ,Mayiladuthurai ,Mayiladuthurai District Collector's Office ,Federation of All Tamil Nadu Farmers' Associations ,Tamil Nadu government ,Mayiladuthurai Collector's Office; Farmers' Association ,Dinakaran ,
× RELATED காந்தி சிலை ரவுண்டானா பகுதியில்...