×

ரேஷன் கடைகளில் பெண்களுக்கு கழிப்பறை வசதி அதிமுக உறுப்பினர் கோரிக்கை

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா (அதிமுக) பேசியதாவது:
ரேஷன் கடை ஊழியர்கள் தங்களது வழக்கமான பணியை தவிர, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு அளிக்கும் பணியினை மேற்கொள்கின்றனர். பெரும்பாலான நியாய விலை கடைகள் பழுதடைந்த கட்டிடங்களில் செயல்படுகிறது.

அங்கு கழிப்பறை வசதி இல்லை. இதன் காரணமாக மகளிர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். அனைத்து நியாய விலை கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும். அமைச்சர் அர.சக்கரபாணி: நியாய விலை கடைகளில் பெண்கள் வேலை பார்க்கிறார்கள், கழிப்பறை வசதி வேண்டுமென்று நீங்கள் சொன்னீர்கள். இப்போது கட்டப்படுகின்ற அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கழிப்பிட வசதி இருக்க வேண்டுமென்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு விவாதம் நடந்தது.

The post ரேஷன் கடைகளில் பெண்களுக்கு கழிப்பறை வசதி அதிமுக உறுப்பினர் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Ambasamutram Ishaki Supbaia ,Adimuka ,Food and Consumer Protection Department ,Aimuga ,
× RELATED தேர்தலில் போட்டியிட இன்று முதல் விருப்பமனு பெறுகிறது பாமக!