×

20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை; ஒன்றிய அரசு அதிகாரிகள் வந்தார்கள் பார்த்தார்கள், இதுவரை அனுமதி தரவில்லை: அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று கூட்டுறவுத் துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்ைக மீதான விவாதத்தில், உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து அமைச்சர் சக்கரபாணி பேசிய தாவது:
கடந்த ஆண்டு ஈரப்பதம் அதிகமாக இருப்பதை உணர்ந்து, உடனடியாக பிரதமருக்கு கடிதம் எழுதி, 17 சதவிகிதம் ஈரப்பதமுள்ள நெல்லை தான் வாங்கிக் கொண்டிருக்கிறோம். ஆனால் 20 சதவீதமாக உயர்த்தித் தர கோரிக்கை வைத்தனர்.

அதில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. ஒன்றிய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது. இந்த ஆண்டு, பெஞ்சல் புயல் காரணமாக ஈரப்பதத்தை அதிகப்படுத்தித் தர கோரிக்கை வைத்தோம். 5, 6 மாவட்டங்களில் பார்த்துவிட்டுச் சென்றனர். அப்போதும் அதற்கு அனுமதி தரவில்லை. இருந்தபோதிலும், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ஈரப்பதமாக இருந்தாலும் அந்த நெல்லை, விவசாயிகளிடமிருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக இந்த அரசு கொள்முதல் செய்து வருகிறது.

The post 20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய கோரிக்கை; ஒன்றிய அரசு அதிகாரிகள் வந்தார்கள் பார்த்தார்கள், இதுவரை அனுமதி தரவில்லை: அமைச்சர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Chennai ,Cooperative Department, ,Food and Consumer Protection Department ,Tamil Nadu Legislative Assembly ,Minister ,Chakrabarni ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…