×

ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அளிக்கபடுமா? காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் துறைவாரியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய திருவாடனை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசிடம் உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். மேலும் பழைய பேருந்துகளை மாற்றி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மேலும், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அளிக்கபடுமா என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர், தொண்டி பகுதியில் பணிமனை அமைக்கும் செயக்குறிப்பு அரசின் பரிசீலனையில் உள்ளதாக பதில் அளித்தார். மேலும், ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது. பெண்கள் ஒடுக்கப்பட்டவர்களாக இருந்தார்கள். இதனால் பெரியார் கொள்கைகளின் பெண்களை மேம்படுத்த இலவச பயணம் வழங்கப்படுகிறது. அரசின் நிதிநிலை சீராகும் பொழுது ஆண்களுக்கும் விடியல் பயணம் வழங்க பரிசீலிக்கப்படும் என்று பதில் அளித்தார்.

இதையடுத்து, விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட், மார்த்தாண்டம் பேருந்து நிலையத்திற்கு மார்ஷல் நேசமணி பெயரை வைக்க அரசு முன்வருமா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, “தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினால் முதலமைச்சர் அனுமதி பெற்று பெயர் சூட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும், மழை வெள்ளம் பேரிடராக அறிவிக்கப்பட்டதுபோல் தற்போது வெப்ப அலையும் பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போதுமான வழிகாட்டுதல்கள் மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு வழங்கும் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதில் அளித்துள்ளார்.

The post ஆண்களுக்கும் இலவச பேருந்து பயணம் அளிக்கபடுமா? காங்கிரஸ் எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் சிவசங்கர் பதில்!! appeared first on Dinakaran.

Tags : Congress ,Minister ,Sivashankar ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Thiruvadanai ,MLA ,Karumanickam, Thondi ,Congress MLA ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...