×

தொண்டையில் இறைச்சி சிக்கி மாணவி உயிரிழப்பு

பவானி: ஈரோடு மாவட்டம், பவானி கீரைக்கார வீதியைச் சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகள் வர்ஷினி (13). இவர், அப்பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். பவானியை அடுத்த காலிங்கராயன்பாளையம், மணக்காட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று முன்தினம் குடும்பத்துடன் முனிராஜ் சென்றுள்ளார். அங்கு, ஆட்டு இறைச்சி சமைத்து சாப்பிட்டபோது, வர்ஷினியின் தொண்டையில் இறைச்சி துண்டு எதிர்பாராமல் சிக்கிக் கொண்டது. தண்ணீர் குடித்தும் சரியாகவில்லை. தொடர்ந்து, மூச்சு விட முடியாமல் சிரமப்பட்ட மாணவி வர்ஷினியை பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின்னர், பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வர்ஷினி உயிரிழந்தார்.

The post தொண்டையில் இறைச்சி சிக்கி மாணவி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Bhavani ,Muniraj ,Bhavani Keeraikara Road, Erode District ,Varshini ,Mankatur, Kalingkaryanpalayam ,
× RELATED 10 மாவட்டங்களில் 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்