×

நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சவுந்தர பாண்டியனாருக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் உறுதி

சென்னை: திராவிட இயக்க தலைவர்களில் ஒருவரான டபிள்யூ.பி.ஏ.சவுந்தர பாண்டியனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழக சட்டப் பேரவையில் நேற்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் ஆகி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஆலங்குளம் பால் மனோஜ் பாண்டியன்(அதிமுக) பேசியதாவது: நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான, தியாகி சவுந்தர பாண்டியனாருக்கு மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின்:
திராவிட இயக்கத்தினுடைய தலைவர்களில் ஒருவரான சவுந்தர பாண்டியனுக்கு, மணிமண்டபம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை இங்கே வைக்கப்பட்டுள்ளது. உறுப்பினரின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும்.
பால் மனோஜ்பாண்டியன்: எனது கோரிக்கையை உடனடியாக ஏற்று, அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post நீதிக்கட்சி தலைவர்களில் ஒருவரான சவுந்தர பாண்டியனாருக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் உறுதி appeared first on Dinakaran.

Tags : Manimandapam ,Soundara Pandiana ,Chennai ,Dravitha movement ,W. B. A. ,Mu. K. Stalin ,Tamil Nadu Legislative Council ,Housing and Urban Development Department ,Tamil Nadu Urban Housing Development Board ,Soundara Pandianapam ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…