×

கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்துக்கொல்ல முயன்ற கணவன்: தெலங்கானாவில் பரபரப்பு

திருமலை: கர்ப்பிணி மனைவியை நடுரோட்டில் கல்லால் தாக்கி கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். தெலங்கானா மாநிலம் விகாராபாத்தை சேர்ந்தவர் பஸ்ரத்(32), இண்டீரியர் டிசைனர். இவர், ஐதராபாத் ஹபீஸ்பேட்டை ஆதித்யநகரில் பெற்றோருடன் தங்கி வேலை செய்கிறார். கடந்த 2023 ஜனவரி மாதம் அஜ்மீர் தர்காவிற்கு சென்றபோது, ​கொல்கத்தாவை சேர்ந்த ஷபானா பர்வீன்(22) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். பின்னர் பஸ்ரத்தும், ஷபானா பர்வீனும் அதே பகுதியில் தனிக்குடித்தனம் சென்றனர். இந்நிலையில் 2 மாத கர்ப்பிணியான ஷபானா பர்வீனை, கடந்த மார்ச் 29ம் தேதி கொண்டாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்கு பஸ்ரத் அழைத்துச்சென்றார்.

2 நாள் சிகிச்சைக்கு பின் ஏப்ரல் 1ம் தேதி இரவு ஷபானா பர்வீன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் அதிகரித்ததால், ஆத்திரமடைந்த பஸ்ரத், மனைவி பர்வீனை சரமாரியாக தாக்கி கீழே தள்ளினார். பின்னர் அங்கிருந்த கட்டுக்கல்லால் மனைவியை தாக்கினார். இதில் ரத்தவெள்ளத்தில் படுகாயம் அடைந்த ஷபானா பர்வீனை அங்கிருந்தவர்கள் மீட்டு உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் நிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஷபானா பர்வீனின் குடும்பத்தினர் கொடுத்த தகவலின்பேரில் கச்சிபவுலி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ்ரத்தை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post கர்ப்பிணியை நடுரோட்டில் கல்லால் அடித்துக்கொல்ல முயன்ற கணவன்: தெலங்கானாவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Basrath ,Vikarabad, Telangana ,Adityanagar, Hafizpet, Hyderabad ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது