×

ஆக்கிரமிப்புகளை அகற்றி போரூர் ஏரியை சீரமைத்து நடைமேடை பூங்கா அமைக்க வேண்டும்: மதுரவாயல் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில்

சென்னை: போரூர் ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்க ரூ.63 கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, ‘‘மதுரவாயல் காரம்பாக்கம் கணபதி( திமுக) பேசுகையில், “போரூர் ஏரியை ஆழப்படுத்தி கரைகள் மற்றும் சுற்றுச்சுவர் கட்ட அரசு ஆவன செய்ய வேண்டும். போரூர் ஏரி 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நடைமேடை பூங்கா அமைக்க வேண்டும்’’ என்றார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘போரூர் ஏரியை ஆழப்படுத்தி சீரமைக்க ரூ.63 கோடி செலவு ஆகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது, நிதி நிலைமைக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதில் அளித்தார்.

The post ஆக்கிரமிப்புகளை அகற்றி போரூர் ஏரியை சீரமைத்து நடைமேடை பூங்கா அமைக்க வேண்டும்: மதுரவாயல் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் பதில் appeared first on Dinakaran.

Tags : Porur Lake ,Maduravoyal ,MLA ,Chennai ,Minister ,Duraimurugan ,Tamil Nadu Legislative Assembly ,Maduravayal ,Karambakkam Ganapathy ,DMK ,Maduravoyal MLA ,Dinakaran ,
× RELATED கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் ஆஜர்..!!