×

பிரபுதேவா ஜோடியாக வேதிகா

வேதிகா தமிழில் நடித்து நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் ஒப்பந்தமாகியுள்ள படம், ‘பேட்ட ராப்’. இதில் அவர் பிரபுதேவா ஜோடியாக நடிக்கிறார். மலையாளத்தில் ‘தேரு’, ‘ஜிபூட்டி’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.ஜே.சினு இயக்குகிறார். புளூ ஹில் பிலிம்ஸ் சார்பில் ஜோபி பி.சாம் தயாரிக்கிறார். வரும் 15ம் தேதி புதுச்சேரியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. காதல், சண்டை, இசை, நடனம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் படம் உருவாகிறது.

அதற்கேற்ப ‘பாட்டு, அடி, ஆட்டம் – ரிபீட்’ என்ற சுவாரஸ்யமான டேக்லைன் சூட்டப்பட்டுள்ளது. டினில் பிகே கதை, திரைக்கதை எழுதியுள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்கிறார். இமான் இசை அமைக்கிறார். விவேகா, மதன் கார்க்கி பாடல்கள் எழுதுகின்றனர். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், ராஜீவ் பிள்ளை, கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ்கான் நடிக்கின்றனர்.

The post பிரபுதேவா ஜோடியாக வேதிகா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vedika ,Prabhudeva ,SJ Sinu ,Joby ,Blue Hill Films… ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED 37 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த கரகாட்டக்காரன் ஜோடி