×

முத்துப்பேட்டை தர்காவில் வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள தர்காவில் ஒன்றிய அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதற்கு தர்காவின் முதன்மை அறங்காவலரும் தமிழக தர்காக்களின் முன்னேற்ற பேரவை நிறுவன தலைவருமான பாக்கர் அலி சாகிப் தலைமை வகித்தார். திமுக மாவட்ட துணைச்செயலாளர் கார்த்திக், பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான், பேரூராட்சி துணைத்தலைவர் ஆறுமுக சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் அய்யப்பன்.

அபுபக்கர் சித்திக். ஜெகபர் அலி வழக்கறிஞர் தீன் முகமது நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் அளவூதீன், திமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் உதயா, நவீன், சப்வான் ஆகியோர் பேசினார்கள். இதில் 500க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் கருப்பு பேட்ச் அணிந்து வக்பு வாரிய திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

 

The post முத்துப்பேட்டை தர்காவில் வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Targa ,Thiruvaroor ,Union Government ,Targa, Zambuanoda ,Muthuppet ,Chief Trustee ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு மீனவர்கள் 3 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்தது