×

தளபதி விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தில் அவருடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் உட்பட பலர் நடித்து வருகிறார்கள். இப்படம் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் விஜய் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியான போது லியோ படத்தில் நடித்து வரும் திரிஷா தான் மீண்டும் நாயகியாக நடிப்பார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பிரியா பவானி சங்கரை விஜய்க்கு ஜோடியாக நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் ஆரம்பத்தில் மூன்றாம் தட்டு ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வந்த பிரியா பவானி சங்கர் , தற்போது ராகவா லாரன்ஸ், சிம்பு என முன்னேறி வந்திருப்பவர், அடுத்தப்படியாக விஜய்யுடன் நடிப்பது உறுதி ஆகிவிட்டால் முன்னணி நடிகை பட்டியலில் இணைந்து விடுவார்.

The post தளபதி விஜய்க்கு ஜோடியாகும் பிரியா பவானி சங்கர்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : briya bhavani sankar ,vijay ,Lokesh Kanakaraj ,Leo ,trisha ,sanjay dutt ,arjun ,mishkin ,Priya Bhavani Sankar ,Commander ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இனிமே என் படம் ஓடாதுனு சொன்னாங்க - Vijay Sethupathi Emotional Speech at Maharaja Success Meet