- யூனியன் அரசு
- மேகதாது அணை
- ராமதாஸ்
- சென்னை
- பா.ம.க.
- கர்நாடகா சட்டமன்றம்
- முதல் அமைச்சர்
- சித்தராமையா
- காவேரி நதி
- மேகதாது
- அணை
- தின மலர்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த மாதம் 7ம்தேதி கர்நாடக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணைக் கட்டுவதற்கான ஆயத்தப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்து விட்டதாகவும், ஒன்றிய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மேகதாது அணை கட்டி முடிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாகத்தான் ஒன்றிய அமைச்சரை கர்நாடக முதல்வரும், துணை முதல்வரும் சந்தித்திருப்பதை பார்க்க வேண்டும்.
மேகதாது அணைக்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்க 2018ம் ஆண்டில் ஒன்றியஅரசு அளித்த அனுமதி செல்லுபடியாகும் வரை மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழகத்தின் தலை மீது கத்தி தொங்கிக் கொண்டு தான் இருக்கும். அதை ரத்து செய்வது தான் மேகதாது அணையை நிரந்தரமாக தடுப்பதற்கான ஒரே வழியாகும்.
எனவே, அந்த அனுமதியை உடனடியாக ரத்து செய்யும்படி ஒன்றிய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post மேகதாது அணை வரைவு திட்ட அறிக்கைக்கான ஒன்றிய அரசின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.
