நடப்பு ஐபிஎல் தொடரில் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, தான் பங்கேற்ற இரு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. முந்தைய ஐபிஎல் தொடரின்போது, கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்தபோதும் ஷ்ரேயாஸ் ஐயர் 6 தொடர் வெற்றிகளை பெற்றிருந்தார். இதையடுத்து, ஐபிஎல் போட்டிகளில் தொடர்ச்சியாக 8 வெற்றிகளை பெற்ற கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் உருவெடுத்துள்ளார்.
அவர், தொடர்ந்து 7 வெற்றிகள் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ். தோனியை இந்த சாதனைப் பட்டியலில் முந்தியுள்ளார். இந்த சாதனையை, 8 தொடர் வெற்றிகளை பெற்றுள்ள ஷேன் வார்னுடன் அவர் பகிர்ந்து கொள்கிறார். பட்டியலில், கவுதம் காம்பிர் 10 தொடர் வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார். நடப்பு தொடருக்கான ஏலத்தில், ஷ்ரேயாஸ் ஐயரை, ரூ.26.75 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
The post தோனியை முந்திய ஷ்ரேயாஸ் ஐயர் appeared first on Dinakaran.
