- நுகர்வோர் பாதுகாப்பு மையம்
- திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம்
- திருத்துறைப்பூண்டி
- மத்திய தகவல் அமைச்சர்
- தலைமை அஞ்சல் அலுவலகம்
- மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை…
- நுகர்வோர் பாதுகாப்பு மையம்
- தின மலர்
திருத்துறைப்பூண்டி, ஏப். 4: திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரி மத்திய தகவல் துறை அமைச்சருக்கு கடிதம். திருத்துறைப்பூண்டி நகரில் தலைமை தபால் நிலையம் கட்டிடம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கு சொந்தமான 7000 சதுர அடி நிலப்பரப்பில் தபால் நிலையமும் மற்றும் காலி மனையும் அமைந்துள்ளது.தலைaமை தபால் நிலைய அலுவலகத்தில் ஆதார் பணிகள், பாஸ்போர்ட் வழங்கும் பணிகள், பார்சல் தபால் பதிவு செய்தல், சேமிப்பு வங்கி மற்றும் இன்சூரன்ஸ் பிரிவுகளில் சுமார் நூறு பணியாளர்கள் பணி செய்கின்றனர்.
தபால் நிலைய பழமையான கட்டிடமாக இருப்பதால், மேற்கூரையில் தண்ணீர் தேங்கி வழிகிறது. மின்சார இணைப்புகளும் மழைநீர் சுவரிலும் இறங்குவதால், மழை காலத்தில் மின் இணைப்புகளில் மின்கசிவு ஏற்படுகிறது . தபால் நிலைய வேலை நாட்களில் 500 க்கும் மேற்பட்ட மக்கள் ஆதார் பாஸ்போர்ட் மற்றும் இதர முக்கிய பணிகளுக்காக வருகிறார்கள். 20 வருடங்களுக்கு ஒரு முறை கட்டிடங்களின் பாதுகாப்பு தன்மையை தேசிய கட்டுமான பணி கழகம் குழு அமைத்து பார்வையிட வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் கட்டுமான பணி கழகச் சட்டத்தின் அனைத்து விதிகளும் மீறப்பட்டு ஆபத்தான கட்டிடமாக நகரத்தில் இந்த கட்டிடம் விளங்குகிறது.
இது சம்பந்தமாக வர்த்தகர்கள் மூத்த குடி மக்கள் நுகர்வோர் பெருமக்கள் இடமிருந்து புகார் மனு வரப்பட்டு சென்னை மத்திய தபால் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லை.ஆதலால் தகவல் துறை அமைச்சகம், திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலைய கட்டிட தன்மையை ஆராய்ந்து உடனடியாக கட்டிடத்தை இடித்து விட்டு புதிய தபால் நிலைய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
The post திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம் கோரிக்கை appeared first on Dinakaran.
