×

பேரூராட்சி கடைகள் ஏலம் தேதி மாற்றம்

 

திருத்தணி, ஏப் 4: பொதட்டூர்பேட்டை பேரூராட்சி சார்பில், பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. தரை தளத்தில் 9 கடை அறைகள் மற்றும் முதல் தளத்தில் 9 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இத்துடன் அத்திமாஞ்சேரிபேட்டை சாலையில் உள்ள கடையும் பொது ஏலம் மூலம் குத்தகை உரிமம் 4ம் தேதி கோரப்படும் என்று பேரூராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று பேரூராட்சி செயல் அலுவலர் இடைத் தேர்தல் பயிற்சியில் பங்கேற்க செல்வதால், கடைகள் ஏலம் 8ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பேரூராட்சி பொறுப்பு செயல் அலுவலர் ராஜகுமார் கூறுகையில், கடைகள் பொது ஏலத்தில் குத்தகை உரிமம் கோர விரும்புவர்கள் 7ம் தேதி மாலைக்குள் வைப்புத் தொகையை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும். மேலும், ஒப்பந்தப்புள்ளி மூலம் ஏலம் கோர விரும்புபவர்கள் 7ம் தேதி மாலைக்குள் ஏலம் கோரும் கடையின் விவரம் தெளிவாக உரையின் மீது முழு விவரம் எழுதி பேரூராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒப்பந்தப்பெட்டியில் போட வேண்டும் என்று தெரிவித்தார்.

The post பேரூராட்சி கடைகள் ஏலம் தேதி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Town Panchayat ,Tiruttani ,Pothatturpettai Town Panchayat ,Athimancherypettai Road ,Dinakaran ,
× RELATED ஆவடி சத்தியமூர்த்தி நகர் அரசினர்...