×

சிறுவாபுரியில் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்: அதிகாரிகள் நடவடிக்கை

பெரியபாளையம், ஜன.1: சிறுவாபுரி முருகன் கோயில் அருகே நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டை இடித்து வருவாய் துறை அதிகாரிகள் அகற்றினர். பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலை ஒட்டி நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து 31 சென்ட் நிலத்தில் கட்டப்பட்டிருந்த வீட்டை இடித்து அகற்றப்பட்டது. இதில், பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் வருவாய்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை இடித்து அகற்றினர்.

இதனிடையே வருவாய்துறை அதிகாரிகள் போதிய கால அவகாசம் வழங்காமல் இடித்து அகற்றியதாக வீட்டின் சொந்தக்காரர்கள் புகார் தெரிவித்தனர். முந்தைய காலத்தில் கிளினிக், பள்ளி நடத்தி வந்ததாகவும், தங்களது வீட்டில் இருந்து சில பொருட்களை மட்டுமே எடுத்ததாகவும், அனைத்தையும் வெளியே எடுக்கவிடாமல், உரிய அவகாசம் கொடுக்காமல் இடித்து வருவதாக குற்றம் சாட்டினர்.

 

Tags : Siruvapuri ,Periypalayam ,Siruvapuri Murugan Temple ,Balasubramania Swamy Temple ,Ponneri ,
× RELATED மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த வடமாநிலத்தவர் பரிதாப பலி